தாய் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மகள் கைது.




கஹவத்தை வெள்ளந்துறை வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட தாயின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர்களது இளைய மகள் இன்று (16) அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement - செந்தீ குறும்படம் | Senthi Short Film


கடந்த 13ஆம் திகதி, வினிதா ஜயசுந்தர என்ற எழுபத்தொரு வயதுடைய பெண் வீட்டருகே கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட தாயின் இளைய மகள் முப்பத்தெட்டு வயது திருமணமாகாத பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் கஹவத்தை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.



உயிரிழந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கஹவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன பிள்ளைகளையும் உறவினர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து சாட்சியங்களைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மகள் தனது தாயை வீட்டுக்குள் கழுத்தை நெரித்து கொன்று சில மணித்தியாலங்களின் பின்னர் வீட்டின் பின்னால் கொண்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

பின்னர், வீட்டினுள் சிதறிக் கிடந்த இரத்தக் கறைகளை அகற்றுவதற்காக வீட்டை முழுமையாகக் கழுவி சுத்தம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையை செய்துவிட்டு, முற்பகல் 11.40 மணிக்கு தனது பணியிடத்திற்குச் சென்று மாலை 3.40 மணியளவில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அன்றைய தினம் மாலை 3.50 மணியளவில் சந்தேக நபர் வீட்டிற்கு வந்த போது, ​​தனது தாய் பிரச்சனையில் இருப்பதாக சத்தம் போட்ட போது அயலவர்கள் பலர் வீட்டிற்கு வந்தனர்.

இதற்கிடையில், இந்த சந்தேக நபர் கஹவத்தை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு தாய் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

இரத்தினபுரி மோப்ப நாய்ப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது சந்தேக நபரின் கைக்கடிகாரம் இறந்த தாயின் சடலத்திலிருந்து சில அடி தூரத்தில் கிடந்ததாகவும் மோப்ப நாய் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் வெளியாரொருவர் இதனைச் செய்திருக்க முடியாது எனத் தோன்றியதால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கஹவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK