திருகோணமலையின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்குவதாக இருந்தால் மக்களுக்கு பாதகமான விளைவு ஏற்படுமாக இருந்தாலும் நாங்களும் மக்களுடன் சேர்ந்து போராடுவோம்.

 


_ஹஸ்பர்_

இருக்கிற மக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அதை அனுமதிக்க முடியாது.

அவர்களை வெளியேற்றுவதாக இருந்தால் இந்த வீட்டை விட அழகான வசதி உள்ள வீடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.தற்போது இருக்கின்ற தொழில் வாய்ப்புகளை விடவும் மிகவும் அழகான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.


அப்படி ஒரு நஷ்ட ஈடுகளை கொடுத்து செய்வது பரவாயில்லை.
அப்படி இல்லாமல் பலபந்தமாக மக்களை வெளியேற்றி காணிகளை அபகரித்துக் கொடுத்தால் அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் அதற்கு எதிராக மக்களோடு சேர்ந்து போராட்டம் செய்வோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட மத்திய குழு கூட்டம் இன்று (16) கிண்ணியா உப்பாறு தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் "திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்தியாவுக்கு சில பகுதிகள் வழங்கப்பட உள்ளன இதனால் இப்பிரதேசத்தில் உள்ள பலர் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் இது சம்பந்தமாக உங்கள் நிலைப்பாடு என்ன "என கேள்வி எழுப்பியபோதே இவ்வாறு பதிலளித்தார்.அகில இலங்கைமக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையின் கீழ் இடம் பெற்ற மாவட்ட மத்திய குழு கூட்டத்தில்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ். எஸ்.அமீர் அலி,அகில இலங்கைமக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா ,திருகோணமலை மாவட்டத்தின்
முன்னாள் மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்துரைத்த றிசாத் பதியுதீன்


நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு அதற்கான செலவை கொடுக்கச் சொல்லி உள்ளார்கள்
இவர்கள்தான் இந்த நாட்டினுடைய வங்குறதுக்கு காரணம் என தீர்ப்பு கொடுத்துள்ளார்கள்

இவர்களால் பல பேர் பாதிக்கப்பட்டு நஷ்டவாளிகளாக ஆகி உள்ளார்கள் சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

இவர்களிடம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதற்கான நஷ்ட ஈட்டு பணத்தை வழங்குவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளது
என மற்றுமொரு கேள்வியான "பொருளாதார ரீதியில் நாட்டை சீரழித்தவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை இது சம்பந்தமாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்" பதிளலிக்கையில் மேற்கண்டவாறு மேலும் தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK