சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பினர் என்ற வகையில், அதன் விதிமுறைகளை மீறியமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பதுடன், நிர்வாக நடவடிக்கைகளுக்குள் அரசியல் தலையீடு இல்லை என்பதனை நிரூபிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது.