இலங்கையின் நிதித்துறையை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் டொலர் நிதியை வழங்க உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் சபை இணக்கம் தெரிவித்துள்ளது.

நிலையான காப்புறுதித் திட்டம் இலங்கையின் நிதிக்கட்டமைப்பில் நம்பிக்கையை நிலைநிறுத்தும் எனவும், நாட்டை மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றுமெனவும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.