பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நகர்வில் மு.கா உறுப்பினர் நியாஸ் - புத்தளம் நகரசபையின் முன்னாள் உபதவிசாளர் ஏ.ஓ.அலிகான் விசனம்


பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நகர்வில் மு.கா உயர்பீட உறுப்பினர் நியாஸ் ஈடுபடுவதானது, அரசியலில் ஒருபோதும் ஒழுக்கசீலர்களுக்கு இடமில்லை என்பதையே புலப்படுத்துகிறது என்று புத்தளம் நகரசபையின் முன்னாள் உபதவிசாளரும், ஐ.தே.க வின் முன்னாள் அமைப்பாளருமான ஏ.ஓ.அலிகான் தெரிவித்துள்ளார்.


அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 


“புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக, வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான நியாஸினால் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் சில தெளிவுகளை முன்வைப்பது பொருத்தமானாதாகும்.


புத்தளம் மாவட்டமானது பெரும்பான்மை சிங்கள மக்களை அதிகமாகக் கொண்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினராக, கடைசியான பதிவின் அடிப்படையில் மர்ஹூம் எம்.எச்.எம்.நைனா மரைக்கார் அவர்களையே காணமுடிந்தது.


அதற்கு பிற்பாடு போட்டியிட்டவர்கள் எவரும் மக்களினால் தெரிவு செய்யப்படவில்லை. இதற்கு காரணம் எமது சிறுபான்மை மக்கள் ஒன்றித்து செயற்படாமையே ஆகும். இதனடிப்படையில், பல்வேறு விட்டுக்கொடுப்புக்கள், வியாக்கியானங்கள், கழுத்தறுப்புக்கள் இவைகளுக்கு மத்தியிலும், 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் விடயத்தில் குறிப்பாக, புத்தளத்தின் (புத்தளம் என்றால் புத்தளம் மாவட்டம்) மக்களுடன் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட சிந்தணையின் அழுத்தத்தினால் பொது அணியின் அவசியம் தேவைப்பட்டது.


இவ்வாறு ஏற்கனவே பொது அணிகள் ஏற்படுத்தப்பட்டாலும், இந்த அணியின் பாரம் ஒரு தரப்பினை மையமாகக் கொண்டதாகவே இருந்ததினால் அதனுாடாக எதிர்பார்த்த இலக்கினை அடைய முடியவில்லை. இருந்த போதும் அவ்வாறான முயற்சியே இன்றைய புத்தளம் ஒரு சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினரை அடைவதற்கு தளத்தினையேற்படுத்தியதை குறிப்பிட்டாக வேண்டும்.


குறிப்பாக மர்ஹூம் அல்-ஹாஜ்.கமர்தீன் அப்துல் பாயிஸ் அவர்களின் துணிவான நகர்வுகளின் பங்களிப்பானது அளப்பறியது (அன்னாரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ் உயர் சுவனத்தை கொடுக்க பிரார்த்திப்போம்). அவ்வாறானதொரு நிலையில் புத்தளம் மாவட்டத்தில் ஒரு பிரதிநிதி வரவேண்டும் என்பதற்காக புத்தளம் முதல் கல்பிட்டி, மதுரங்குளி மற்றும் பல பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பொது அணியில் போட்டியிட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள், இந்த பொது அணிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை தலைவராகக் கொண்ட ரிஷாட் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தலைவராகக் கொண்ட ரவூப ஹக்கீம் ஆகியோர் பிரதான பங்காளர்கள் என்பது மறைத்து பேசப்பட வேண்டிய விடயமல்ல,


கட்சிகளின் பிரதிநிதிகள் தவறு செய்தால் அதனை தட்டிக் கேட்பதும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பதும் கட்சிகளின் உயர் சபையின் பொறுப்பாகும். இதனை ஏற்றுக்கொண்டதனால்தான் வேட்பாளர்கள் கட்சியின் உறுப்புரிமையினை பெறுகின்றனர் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.


இதனையடுத்து பொது அணியில் போட்டியிடுகின்ற போது, இக்கட்சிகள் பொது அணியின் கட்சியின் செயலாளருடன் எழுத்து மூலமான உடன்படிக்கைகளை செய்வது வழமையானதொன்று, பிற கட்சிகளை சார்ந்தவர்களை உள்ளீர்ககும்பொழுது, அந்த க் கட்சியின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வதாக அக்கட்சியின் செயலாளர் கையொப்பமிட்டு அங்கீகாரம் வழங்குவார். புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விடயத்திலும் இந்த நிலைப்பாடே பின்பற்றப்பட்டுள்ளது.


இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து, அவரை பாராளுமன்ற பதவியில் இருந்து அகற்றியது முஸ்லிம் காங்கிரஸ். இதன் பிற்பாடு அலி சாஹிர் மௌலானா நியமானம் பெற்றார். அலி சாஹிர் மௌலானா என்பவர் கிழக்கு மாகாணத்தைச் சாராதவரா? என்ற கேள்வியும் எம்மில் எழத்தான் செய்கின்றது. அப்படியானால் புத்தளம் விடயத்தில் மேற்கொள்ளப்படும் மேற்படி செயற்பாடுகள், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மன்னாருக்கு அல்லது யாழ்ப்பாணத்துக்கா போகப் போகிறது? என்ற நியாயமான கேள்வி இருக்கத்தான் செய்கின்றது.


இனி விடயத்துக்கு வருவோம், தற்போதைய புத்தளம் மாவட்ட (புத்தளம் அல்ல) பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் தொடர்பில் பேசப்படும் விடயங்கள் கட்சியின் மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களாகும். இந்த தீர்தமானத்துக்கு எதிராக அவர் நீதிமன்றம் சென்றுள்ள செய்தியும் இருக்கின்றது. ஒரு எடுமானமாக பேசினால் அவரது பதவி நழுவும் என்றால், அடுத்து வேட்பாளர் பட்டியலில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வருவார். அவர் இல்லாதவிடத்து அடுத்தடுத்து உள்ளவர்கள் நியமனம் பெறுவர். இதனை யாவரும் அறிவார்கள். இது தான் யதார்த்தமாகும். 


அப்டியானல், 03 வது நிலையில் இருப்பவர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தாஹீர். தாஹீர், கல்பிட்டி (ஏத்தாளை) பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர். இவரது அரசியல் ஆரம்பம் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ்.எம்..எச்.எம்.நவவி அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் என்பதுடன் மட்டுமல்லாமல் பிரதேச மற்றும் மாகாண சபைகளின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் நன்கு பரீட்சையமானவர். அவரும் இந்தப் பொது அணியில் போட்டியிட்ட ஒருவர், புத்தளம் மாவட்ட மக்கள் (புத்தளத்திலும்) அவருக்கு வாக்களித்த மக்கள் இருக்கின்றார்கள் என்பதும் உண்மையாகும். இது ஒரு தகவலுக்காக பதிவிடுகின்றேன்.


கடந்த உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர் கோரலின் போது, அன்றைய சூழலில் இலங்கையில் காணப்பட்ட அரசியல் மாற்றத்தால் அவர் சுதந்திரக் கட்சியின் சின்னத்தினை பயன்படுத்தாமல், பொது சின்னத்தின் கீழ் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு உதவி செய்தார் என்பதும் உண்மை, அதற்கும் தேசிய அரசியலுக்கும் முடிச்சுப் போடுவது பொருத்தமானதாக இருக்காது என்பது எனது அவதானம்.


குறிப்பாக, சகோதரர் நியாஸ் அவர்கள் கடந்த உள்ளுராட்சி தேர்தலில், புத்தளம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில், சஜித் பிரேமதாசவை தலைவராகக் கொண்ட ஜக்கிய மக்கள் சக்தியின் சின்னத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியவர். பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர். மட்டுமல்லாது,பாலாவியில் அரசுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியவருமாவார்.


அப்படியான நிலையில், அவரது கட்சி உறுப்பினர் உள்ளூராட்சி மன்றத்துக்கு தெரிவானால், அந்த உறுப்பினர்  ஜக்கிய மக்கள் சக்திக்கு எதிராக செயற்பட்டால், ஜக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்தால், புத்ததளம் விடயத்தில் சஜித்தே, ஹெக்டரே வாய் மூடி இரு சொல்லுவார் என்றால், அடுத்த கட்ட தீர்மானம் எழுத்து மூலமாக வரும் என்பதையும் அவர் அறியாமல் இல்லை. ‘மாமி உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தாள் பொன் குடம்’ என்றதை போன்று இருக்கின்றது இந்த ஊடக சந்திப்பின் கருத்துக்கள்.


ரிஷாட் பதியுதீனை பொருத்தவரையில், புத்தளம் மாவட்ட அரசியலில் அவரது நேரடி பிரதிநிதியொருவரை கொண்டுவரத் தேவையில்லை. புத்தளம் மக்களையும் ஏனைய மக்களையும் பிரித்தாழ வேண்டிய, (குறுகிய) அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியமுமில்லை. அரசியல்வாதிகளை பொறுத்தவரையில் அவர்களின் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் முன்னின்று செயற்படுவது என்பது சரியானது. இதனை தான் ரவூப் ஹக்கீம் அவர்களும் செய்கின்றார் என்பதும் புதுமையுமல்ல.


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவம் விடயத்தில் அடுத்ததாக இருப்பவர் தாஹீர், அவரது அரசியல் முன்னெடுப்புக்களுக்கு ஒரு அணி தேவை. இந்த அணி எதுவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மாணிப்பது அவரது கையில் உள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு அவர் விரும்பினார், அதனடிப்படையில், இணைந்துகொண்டார். இதில் என்ன தவறு இருக்கின்றது?


இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்றவென்றால், ஏன் அவர் முஸ்லிம் காங்கிரஸினை தெரிவு செய்யவில்லை? என்பதேயாகும். இது தொடர்பில் விமர்சிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.


இந்தப் பின்னணயில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் தலைவர் ரிஷாட்  பதியுதீன், கட்சியின் சட்டத்துறை பணிப்பாளர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் ஆகியோர் சில விளக்கங்களை வழங்கியிருந்தார்கள். இதன் போது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கூட்டுப் பொறுப்பு தொடர்பில் தெரிவித்ததுடன், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் ஒப்பந்தம், இதனது தற்போதைய தொய்தல் நிலை குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். கட்சிகள் என்ற அடிப்டையில், உடன்பாடு எடடப்பட்ட விடயங்களை செய்வதற்கு இணக்கம் கண்டால் அதனை செய்வது தான் நேர்மையாகும், தேர்தல் காலங்களில் புத்தளம் மாவட்டம் என்றும், பின்னர் புத்தளம் என்றும் பேசுவது ஏனைய பிரதேச மக்களை புறக்கணிப்பதும், அவர்களது வாக்குகளை மலினப்படுத்துவதுமேயாகும்.


அத்தோடு ஊடக சந்திப்பில் பயன்படுத்தப்படும் வசனங்கள் சகோதரர் நியாஸ் அவர்களை பொறுத்தவரையில் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது, அவர் சார்ந்தவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்றும் தெரியாது. புத்தளம் பாராளுமன்றப் பிரதிநிதி தொடர்பில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புக்கள் பற்றி அவர் நன்கு அறிவார். இது மட்டுமல்ல, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு செயலாளர் புத்தளம் ஜம்இய்யத்துல் உலமாவுக்கு எழுதிய கடிதம் தொடர்பிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேண்டுகோளை குறிப்பிட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது. இது தொடர்பிலும் அவருக்கு அனுப்பப்பட்ட பதிலிலும், கட்சிகளுக்கு இடையில் உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்கலாம் என்று கருத்துப்பட குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்ற விடயமும் இருக்கலாம்.


அப்படியான நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது முறையற்ற சொற்களைக்கொண்டு விமர்சிப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாது. நித்திரையில் இருந்து எழுந்தவர் போல் ரிஷாட் பதியுதீனை பேசுகின்றார் அல்லது சகோதரர் நியாஸ் அவர்களுக்கு பேசச் சொல்லிக் கொடுத்துள்ளார்களா? என்பது புரியாமலுமில்லை.


“அரசியலில் நீண்டகால நன்பனும் இல்லை. எதிரியும் இல்லை’ என்பார்கள், இது தனிமனித வாழ்க்கைக்கு பொறுத்தமாக இருககலாம். ஆனால், அரசியல் சமூக வாழ்க்கைக்கு பொறுத்தப்பாடாக அமையாது எ்னபதை அரசியலில் இருப்பவர்கள் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.


“தொடர்ந்தும் புத்தளம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பறிக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது, ரிஷாட் பதியுதீன் இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று சகோதரர் நியாஸ் அவர்கள் கூறுவதும், முனாபிக்தனம் என்று சுட்டிக்காட்டுவதும், எந்தளவுக்கு தங்களது அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு இருக்கின்றது என்பதை, உங்களை விரும்பும் வாக்காளர்கள் மதிப்பிட்டுவிட்டார்கள்.


மாகாண சபையில், மத்திய அரசில் எவருடன் சேரலாம்? பிரதேச மட்டத்தில் தனித்தும் பிரித்தும் அரசியல் செய்யலாம் என்பதானது, எந்தக் கொள்கையின் வகுப்பாகும் என்பது பாமர மக்களாகிய எங்களுக்கு புரியவில்லை.

இறுதியில் ‘புத்தளம் பாராளுமன்றம் பறிக்கப்பட போகின்றது, இது வேறு மாவட்டத்துக்கு போகின்றது (கல்பிட்டி)’ என்ற கருத்தை விதைத்து, தொடர்ந்தும் பிள்ளையினை கிள்ளியும் தொட்டிலையும் ஆட்டும் நகர்வில் சகோதரர் நியாஸ் ஈடுபடுவதானது, ஒருபோதும் அசியலில் ஒழுக்க சீலர்களுக்கு இடமில்லை என்பதையே இந்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கின்றமை புலனாகின்றது.


விட்டதை தொட்டுச் செல்லேவாம். தொடர்ந்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணியுடன் பயணிப்போம். காலம் பதில் செல்லும் என்பதை நோக்கி....!” என்றார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK