அனைத்துலக தொலைக்காட்சி தினம் இன்று....

(சிரேஷ்ட ஊடகவியாளர் யூ எல் யாக்கூப்) 

அரச தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் (இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்) கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் நின்று பிடிப்பது என்பது என்னைப்  பொறுத்தளவில் வலிமை மிகுந்த ஒரு சமாச்சாரமாகும்....ஆனால் நின்று பிடித்து விட்டதில் ஒரு ஆத்ம திருப்தி இருக்கத்தான் செய்கிறது.... கவர்ச்சிமிகு கனவுகளைக் கொண்ட மிகச்சிறந்த ஒரு துறை இது... கனவுகள் நிஜமாவதும்  நாம் தெரிவு செய்யும் பாதைகளைப்  பொறுத்ததே.

முளைக்கும் போதே புதைக்க நினைக்கும் ஒரு கூட்டமும் இருக்கும்.... நாம் கொண்டு வந்தவர்களே நம் முதுகில் குத்திய சோக வரலாறுகள் ... முட்டி மோதி மூக்குடைந்தவர்கள் இறுதியில் நமது தன்மானத்திலும் நற்பெயரிலும் கூட கை வைக்கும் அவலம்.... இவை அனைத்திற்கும் அப்பால் நீதி, நேர்மை, உண்மை மறுக்கப்பட்ட சோகம் நிறைந்த வரலாறுகள்....இவை அனைத்தும்  நாம் கடந்து வந்த ஊடகப் பாதையின் கரடுமுரடான பக்கங்கள்.....

இவை அனைத்தயும் தாண்டி நாட்டிற்கும் சமூகத்திற்கும் நாம் சார்ந்த நிறுவனத்திற்கும் நல்லது செய்யும் வாய்ப்பை அந்த ஆண்டவன் இந்த தொலைக்காட்சி ஊடகம் வாயிலாக வழங்கினான்.... வழங்குகிறான்.... அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே.... அல்ஹம்துலில்லாஹ்.  

சுமார் மூவாயிரம் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் வாய்ப்பு.... ஜப்பான், சீனா. சுவீடன், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பெற்ற உயர் தரமான பயிற்சிகள் மற்றும் மாநாடுகள், புனித மக்கா நகரில் அரச விருந்தினராக ஹஜ் கடமைக்கு நான்கு தடவைகள் பயணித்த அனுபவம், உள்ளூர் மற்றும் சர்வதேசபிரமுகர்களுடனான   பேட்டிகளும் சந்திப்புகளும், அனைத்தையும் தாண்டி அச்சம் தரும்  போர்க்காலச் சூழலில் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் ஆற்றிய ஊடகப்பணிகள், சர்வதேச உச்சி மாநாடுகளில் உயர் அதிகாரியாக கலந்து அவற்றின் வெற்றிக்காக உழைத்த அனுபவம். இவை போன்ற நிறைய கருமங்கள் இந்த நான்கு தசாப்த பணிக்காலத்தில் உண்டு.

இவைகளுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெற்ற விருதுகள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் நினைவுகளாகும். இவை அனைத்தும் கடந்து பெற்ற ரசிகப் பெரு மக்களின் பேரபிமானம் மன நிறைவைத் தரும் பெரும் வெகுமதியாகும்.News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK