குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி 2022ம் ஆண்டில் இலங்கையில் சுமார் 2,087 இளம் வயது தாய்மார்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த தாய்மார்கள், குடும்ப அமைப்பு சரிவு, பாலியல் கல்வி இல்லாமை, பெற்றோர்களிடையே போதைப்பொருள் பழக்கம், பெற்றோர் இருவரும் வேலையில் இருப்பது மற்றும் குழந்தைகளிடையே ஸ்மார்ட் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற பல காரணிகள் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்தன என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் கேள்விக்கு பதிலளித்த அவர், இலங்கையில் 124,482 குழந்தைகளை உள்ளடக்கிய 89,164 ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் (single-parent families) உள்ளன.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK