தன் மீதும் தன்னுடைய குழுவை சேர்ந்த இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றசசாட்டுக்களை மறுப்பதோடு முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தாயார் என கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு எதிர்க்கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாகவும் இது குறித்து சபாநாயகருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் பாராளுமன்றத்தில் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில், தன் மீதும் தன்னுடைய குழுவை சேர்ந்த இருவர் மீதும் இவ்வாறு பொய்யான குற்றசசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனினும், என் மீது குற்றம் சுமத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதாரன, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக இனம்காணப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் கூறினார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK