இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் போது மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண் தொடர்பான தகவல்களைக் கண்டறிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இன்று அறிவிக்கவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இன்று அத தெரணவிடம் தெரிவித்தார்.

ஏற்கனே இலங்கையர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.