இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் அதிகரித்துள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறை, மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையடைந்துள்ளது.
வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அழைப்பு விடுப்பதுடன், பொதுமக்களின் உயிரிழப்புக்களைத் தடுக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் அதிகபட்சமான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றது.
1967 எல்லைகளின் அடிப்படையில் அருகருகே வாழும் இரு நாடுகளினதும் சர்வதேச ரீதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுருக்களுக்கு இணங்க, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை உறுதியாக உள்ளது.
அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
டெல் அவிவ் மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றன. இதுவரை இலங்கையர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 அக்டோபர் 08
0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK