யாழில் பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்


யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.

காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அல்வாய் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , 27 வயதான அருமைராசா சிந்துஜன் எனும் நபரே காயமடைந்துள்ளார்.

பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள்,  திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குறித்த நபரை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது, பொலிசார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்டார்.

அதன் போது, பொலிசார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

அதில் சந்தேகநபர் காலில் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

-யாழ். நிருபர் பிரதீபன்-

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK