இதுவரை மின்சாரக் கட்டணம் எதுவும் பெறவில்லை - சனத் நிஷாந்த எனக்கு தொலைபேசியில் அறிவித்ததன் பின்னரே மின் கட்டணத்தை அவர் செலுத்தியது தெரிய வந்தது ; நாமல்


பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மின் கட்டணத்தை செலுத்தியமை தொடர்பில் சனத் நிஷாந்த தனக்கு தொலைபேசியில் அறிவித்ததன் பின்னரே தமக்கு தெரியவந்ததாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சனத் நிஷாந்த செலுத்திய மின்சாரக் கட்டணம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது பெயரில் இதுவரை மின்சாரக் கட்டணம் எதுவும் பெறவில்லை, தன் பெயரில் கட்டண நிலுவையும் இல்லை என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்த மின்சார சபைக்கு சென்று வினவிய போது நாமல் ராஜபக்ஷவின் பெயரில் மின் கட்டணம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சனத் நிஷாந்த திருமண வைபவம் தொடர்பான மின் கட்டணத்தை செலுத்தியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை அபிவிருத்தி செய்த மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை மற்றும் நன்றியை தெரிவிக்கும் வகையில் இந்த கட்டணத்தை செலுத்தியதாகவும் அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்திருந்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK