ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜேர்மன் நிறுவனங்களான பிரெட்ரிக் நௌமன் பவுன்டேஷன் மற்றும் பிரெட்ரிக் ஈபர்ட் பவுன்டேஷன் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை


ஜனாதிபதி விக்கிரமசிங்க 2023 செப்டம்பர் 27-30 வரை பேர்லினுக்கு மேற்கொண்டிருந்த பணி விஜயத்தின் போது பிரெட்ரிக் நௌமன் பவுன்டேஷன்  மற்றும் பிரெட்ரிக் ஈபர்ட் பவுன்டேஷன் ஆகியவற்றின் தலைவர்களைச் சந்தித்தார்.

2023 செப்டெம்பர் 29ஆந் திகதி பிரெட்ரிக் நௌமன் பவுன்டேஷன் பிரதிநிதிகளைச் சந்தித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, இலங்கையில் பிரெட்ரிக்  நௌமன் பவுன்டேஷன் மேற்கொண்டுள்ள பணிகளைப் பாராட்டினார். டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையில் நிலையான சுற்றுலாவுக்கான உதவி ஆகியவற்றில் அவர்களது செயற்பாடுகளை வலுப்படுத்துமாறு அவர் பவுன்டேஷனுக்கு மேலும் அழைப்பு விடுத்தார். இலங்கையில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த சமூக சந்தைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பிரெட்ரிக் நௌமன் பவுன்டேஷனின் தலைவர் பேராசிரியர் கார்ல்-ஹெய்ன்ஸ் பேக் ஏற்றுக்கொண்டார். ஜேர்மனி ஒரு உரையாடல் பங்குதாரராக இருக்கும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் கட்டமைப்பின் கீழ் பிரெட்ரிக் நௌமன் பவுன்டேஷனுடன் எதிர்கால ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஜேர்மனியின் சுதந்திர ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த, ஜேர்மனியை அடிப்படையாகக் கொண்ட இலாப நோக்கற்ற இந்த பவுன்டேஷன், உலகம் முழுவதும் 70 நாடுகளில் செயற்படுகின்றது.

ஜனாதிபதி விக்கிரமசிங்க 2023 செப்டெம்பர் 28ஆந் திகதி பிரெட்ரிக் ஈபர்ட் பவுன்டேஷனின் பிரதிநிதிகளைச் சந்தித்து, இலங்கையில் அதன் பணிகளை  மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடினார். பிரெட்ரிக் ஈபர்ட் பவுன்டேஷன் ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான தற்போதைய பொருளாதார மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்தும் பிரெட்ரிக் ஈபர்ட் பவுன்டேஷன் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விளக்கினார். இலங்கை பவுன்டேஷன் நிறுவனம் மற்றும் இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை நிறுவுதல் உட்பட, இலங்கைக்கு பிரெட்ரிக் ஈபர்ட் பவுன்டேஷன் வழங்கிய கடந்தகால பங்களிப்புக்களை ஜனாதிபதி பாராட்டினார்.

பிரெட்ரிக் நௌமன் பவுன்டேஷனின் பிரதிநிதியாக அதன் தலைவர் பேராசிரியர் கார்ல்-ஹெய்ன்ஸ் பேக் மற்றும் பிரெட்ரிக் நௌமன் பவுன்டேஷனின் சர்வதேசத் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி ரெனே கிளாஃப் ஆகியோர் கலந்துகொண்ட அதே வேளை, பிரெட்ரிக் ஈபர்ட் பவுன்டேஷனின் பிரதிநிதியாக அதன் தலைவர் மார்ட்டின் ஸ்க்லஸ், ஆசியா மற்றும் பசிபிக் திணைக்களத்தின் தலைவர் மிர்கோ குந்தர் மற்றும் மேலும் இருவர் கலந்து கொண்டனர். ஜேர்மனியைத் தலைமையிடமாகக் கொண்ட பிரெட்ரிக் நௌமன் பவுன்டேஷன் மற்றும் பிரெட்ரிக் ஈபர்ட் பவுன்டேஷன் ஆகிய இரண்டும், இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி பங்களிப்புச் செய்துள்ளன. இந்த இரண்டு பவுன்டேஷன்களுடனான இலங்கையின் ஈடுபாடுகள் பல தசாப்தங்களாக தொடர்கின்றன.

இந்த சந்திப்பில், ஊழியர்களின் தலைவரும், ஜனாதிபதியின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதுவர் வருணி முத்துக்குமாரண, பொருளாதார ஸ்திரப்படுத்தல், மீட்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, நிதி அமைச்சரின் ஆலோசகர் / பொருளாதார நிபுணர் தேஷால் டி மெல் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் சதுர பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டார்.


வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 அக்டோபர் 02

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK