இராஜாங்க அமைச்சு கிடைத்தால், அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பேன் என கூறும் முஷர்ரப், யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறார்?


எவ்வாறு இராஜாங்க அமைச்சால் முழு அம்பாறை மாவட்ட பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என கூற முடியுமா?

மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது அரசியல் வாதிகளின் பண்புகளிலொன்று. இதில் ஓரிருவர் விதி விலக்கானவர்கள். இப்படி ஏமாற்றியும் அரசியல் செய்ய முடியுமா என்பதை பா.உறுப்பினர் முஷர்ரபிடமிருந்து அனைத்து ஏமாற்று அரசியல் வாதிகளும் பாடம் கற்க வேண்டும். அந்தளவு ஏமாற்று அரசியலில் பா.உறுப்பினர் முஷார்ரப் கற்று தேறியுள்ளார்.

அண்மையில் உரையாற்றிய பா.உறுப்பினர் முஷர்ரப், தனக்கு இராஜாங்க அமைச்சு கிடைத்தால், அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பேன் என கூறியிருந்தார். இது ஒரு அறிவுடமையான பேச்சா? ஒரு விடயத்தை கூறும் போது அதில் ஏதாவதொரு தர்க்கம் இருக்க வேண்டும். இவர் இவ்வாறு கூறியது ஏற்கும் வகையில் உள்ளதா?

ஒருவர் இராஜாங்க அமைச்சரானால், தனது அமைச்சுக்குரிய ஓரிரு பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதுவும் பலமான இராஜாங்க அமைச்சாக இருந்தால் மாத்திரமே ஏதாவது சாத்தியமாகும். தற்போதைய நிலையில் கெபினட் அமைச்சர்களே பெரிதாக எதுவும் செய்ய முடியாமல் இருப்பதும் இவ்விடத்தில் சுட்டி காட்டத்தக்கது. பா.உறுப்பினர் முஷார்ரப் முன்னர் எடுத்தது போன்று பிடவை கைத்தொழில் இராஜாங்கத்தை எடுத்தால் எதுவும் செய்ய முடியாது. நிலை இவ்வாறிருக்கையில் எப்படி அம்பாறை மாவட்டத்தின் முழு பிரச்சினைகளையும் இராஜாங்க அமைச்சின் மூலம் தீர்ப்பது சாத்தியமாகும்.

தனக்கு ஒரு முழு அமைச்சு கிடைத்தால் ஏதாவது செய்வேன் என கூறினாலும் சற்றேனும் ஏற்கலாம். சில பிரச்சினைகள் கெபினட்டில் கலந்துரையாடப்பட வேண்டியதாகவும் இருக்கும். அப்படி கூட கூறவில்லை. ஏன் இப்படி முஷார்ரப் கூற வேண்டும் என அனைவரும் சிந்திக்கலாம். இங்கு தான் பா.உறுப்பினர் முஷார்ரப், தனது ஏமாற்று அரசியலினை ஓட விடுகிறார்.

பா.உறுப்பினர் முஷார்ரபை முழு முஸ்லிம் சமூகமும் தூற்றிக்கொண்டிருக்கின்றமை யாவரும் அறிந்ததே! இனவாதிகள் எரித்த முஸ்லிம் ஜனாஸாக்களின் சாம்பலில் நின்று கொண்டு பதவிகளுக்காக இனவாதிகளிடம் சோரம் போனவர்களில் இவர் முதன்மையானவர். இவர் இராஜாங்க அமைச்சொன்றை குறி வைத்து காய் நகர்த்துகிறார். அவருக்கு முன்னர் வழங்கிய இராஜாங்க அமைச்சு சில நாட்களிலேயே பறி போய்விட்டது. மீண்டும் இப்படி பதவியொன்று கிடைத்தால், அவரை மக்கள் தூற்றாமால், " தான் மக்களுக்காகவே பதவியை எடுக்கின்றேன் " என்ற மாயையை மக்களிடையே ஏற்படுத்த முனைகிறார். தனக்கு இப்போது பெரிதாக அரசியல் அதிகாரமில்லை. எனக்கு அரசியல் அதிகாரம் இருந்தால் சாதிப்பேன் என்ற உளவியலை மக்களிடையே புகுத்த முனைகிறார்.

பா.உறுப்பினர் முஷார்ரப் நேர்மையானவராக இருந்தால், ஒரு இராஜாங்க அமைச்சு மூலம் எப்படி முழு அம்பாறை மாவட்ட பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதை தெளிவு செய்ய வேண்டும். இதனை உரிய முறையில் தெளிவு செய்தால், நாமும் அவரை ஆதரிப்பது கடமையாகும். ஒரு இராஜாங்க அமைச்சின் மூலம் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் பொறிமுறையை வைத்தால், அவரை ஆதரிப்பதில் தவறில்லை தானே!

அவரால் ஒரு இராஜாங்க அமைச்சின் மூலம் எவ்வாறு முழு பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என ஒரு போதும் தெளிவு செய்ய முடியாது.

இதனை மாத்திரம் சிந்தித்தால் கூட பா.உறுப்பினர் முஷார்ரபின் ஏமாற்று அரசியலை அறிந்துகொள்ள முடியும். மக்கள் மடையர்களல்ல. இன்னும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை ஒரு தேர்தல் வந்தால் பா.உறுப்பினர் முஷார்ரப் அறிந்துகொள்வார்.


ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்.

சம்மாந்துறை.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK