“தயவுசெய்து என்னை பணி நீக்கம் செய்யாதீர்கள்”


நுகர்வோரை அநாகரீகமான முறையில் தூற்றியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அக்குரஸ்ஸ சமுர்த்தி வங்கியின் முகாமையாளரையும் மற்றுமொரு அதிகாரியையும் பணி இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அக்குரஸ்ஸ சமுர்த்தி வங்கியில் வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறச் சென்ற சமுர்த்தி பெண் ஒருவரை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் மனித உரிமை அமைப்பு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

குறித்த சமுர்த்தி வங்கி முகாமையாளரையும் மற்றுமொரு உத்தியோகத்தரையும் பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பிரதேச செயலாளர் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சம்பந்தப்பட்ட மனித உரிமை அமைப்பின் அதிகாரிகள் குழுவொன்று சமுர்த்தி வங்கி அதிகாரியை சந்திக்கச் சென்றிருந்தமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் இடம்பெற்றுள்ளது.

பணி இடைநீக்கத்தால் மிகவும் உதவியற்ற நிலையில் இருப்பதாகவும், கூலி வேலை கிடைக்காமல் இருப்பதாகவும் அதிகாரிகளிடம் குறித்த சமூர்த்தி அதிகாரிகள் கூறி அழுதுள்ளனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK