இஸ்ரேலிலுள்ள இலங்கை ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான விடயங்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக இஸ்ரேலின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.