அஹ்னாப் மீது குற்றம் சுமத்தியவர்களே அதனை கைவிடும் நிலை - வழக்கில் திடீர் திருப்பம்


 - எம்.எப்.அய்னா -

அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசி­ரி­ய­ருக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்­டுள்ள  வழக்கில் திடீர் திருப்பம் ஏற்­பட்­டுள்­ளது.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர், மாண­வர்­க­ளுக்கு அஹ்னாப் ஜஸீம் புலி­களின் தலைவர் பிர­பா­கரன், நளீ­மியா கலா­பீ­டத்தின் அஷ்ஷெய்க் அகார் முஹம்­மது ஆகி­யோரின் உரை­களைக் காட்டி, தன்­னிடம் கற்ற மாண­வர்­க­ளி­டையே அடிப்­ப­டை­வா­தத்தை தூண்டி, பிற மதத்­த­வர்கள் மீது பகைமை உணர்வை தூண்­டி­ய­தாக முன் வைத்த குற்­றச்­சாட்­டுக்களை இது­வ­ரை­யி­லான சாட்­சி­யங்களால் நிரூ­பிக்க மு­டி­யாமல் போயுள்­ளது. 

அதன்­படி வழக்கைத் தொடுத்த சட்ட மா அதி­பரே, இந்த வழக்கை முன் கொண்டு செல்­வதா இல்­லையா என தீர்­மானம் ஒன்­றுக்கு வர­வுள்ளார். இதற்­கான கால அவ­காசம் புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொ­டவால், அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­ல­கவின் கோரிக்கை பிர­காரம் சட்ட மா அதி­ப­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது

அஹ்னாப் ஜஸீம் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு சுமார் 579 நாட்­களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 3 சரீரப் பிணை­களில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார்

கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில், சிலா­வத்­துறை, பண்­டா­ர­வெ­ளியில் அமைந்­துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.  அவ­ருக்கு எதி­ராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் பீ. 44230/20 எனும் இலக்­கத்தின் கீழ் விசா­ரணை தக­வல்கள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

பின்னர் அதனை மையப்­ப­டுத்தி சட்ட மா அதிபர் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக கூறி புத்­தளம் மேல் நீதி­மன்றில் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­துள்­ளது.

இந்த வழக்கு இறு­தி­யாக கடந்த செப்­டம்பர் 9 ஆம் திகதி வெள்­ளி­யன்று விசா­ர­ணைக்கு வந்த போது, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­லக்க மன்றில் ஆஜ­ரானார். குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீ­முக்­காக சட்­டத்­த­ர­ணி­க­ளான சஞ்சய் வில்சன் ஜய­சே­கர , ஹுஸ்னி ராஜித் ஆகி­யோ­ருடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ரானார்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக கூறி, அஹ்னாப் ஜஸீ­முக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. புத்­தளம் – மது­ரங்­குளி பகு­தியில் உள்ள எக்­ஸ­லென்ஸி எனும் பெயரை உடைய பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு தீவி­ர­வாத கொள்­கை­களை ஊட்டி இன , மத, முரண்­பா­டுகள் மற்றும் பகை உணர்­வினை தூண்­டி­ய­தாக அதில் கூறப்­பட்­டி­ருந்­தது.

ஒரே ஒரு குற்­றச்­சாட்டே சுமத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், குறித்த குற்­றச்­சாட்டு தொடர்பில் தான் நிர­ப­ராதி (சுற்­ற­வாளி) என அஹ்னாப் ஜஸீம் அறி­வித்­துள்ளார்.இத­னை­ய­டுத்தே சாட்சி விசா­ர­ணைகள் தொடர்ந்­தது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இறு­தி­யாக கடந்த வெள்­ளி­யன்று விசா­ர­ணையின் போது  மொஹம்மட் நஸ்­ருதீன் அக்மல், அப்துல் ரசாக் ஹசான் ஆகிய இரு சாட்­சி­யா­ளர்கள் சாட்­சி­ய­ம­ளித்­தனர். புத்­தளம் ‍ மது­ரங்­குளி  ஸ்கூல் ஒப் எக்­ச­லன்ஸி பாட­சா­லையின் பழைய மாண­வர்­க­ளான அவர்­க­ளுக்கு அவர்கள் க.பொ. த. சாதா­ரண தரம் கற்கும் போது, பிர­தி­வா­தி­யான அஹ்னாப் ஜஸீம் தமிழ் பாடம் கற்­பித்­தி­ருந்தார்.  அந்த காலப்­ப­கு­தியின் போதே  அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­பட்­ட­தாக வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

அதன்­படி கடந்த வாரம்  புத்­தளம் மேல் நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்த குறித்த இரு சாட்­சி­யா­ளர்­களும்,  தங்­க­ளுக்கு அஹ்னாப் ஆசி­ரியர் கற்­பித்­தமை உண்மை எனினும் அவர் ஒரு போதும் பாட­வி­தா­னத்­துக்கு அப்­பாற்­பட்ட, அடிப்­ப­டை­வாத கருத்­துக்­களை சொல்­லித்­தரவில்லை என்­பதை ஆணித்­த­ர­மாக குறிப்­பிட்­டனர்.  அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­லக பல்­வேறு வித­மாக  கேள்­வி­களைக் கேட்ட போதும் இரு சாட்­சி­யா­ளர்­களும், அஹ்னாப் அடிப்­ப­டை­வாத விட­யங்­களை தமக்கு கற்­பிக்­க­வில்லை என்­பதை நீதி­ப­திக்கு தெரி­வித்­தனர்.

இதற்கு முன்­னரும் சாட்­சி­ய­ம­ளித்த 3 சாட்­சி­யா­ளர்கள், இதனை ஒத்த சாட்­சி­யத்­தையே நீதி­மன்றில் அளித்­தி­ருந்­தனர். இவ்­வா­றான நிலையில், கடந்த வெள்­ளி­யன்று விசா­ர­ணையின் போது சாட்­சிகள் குறுக்கு விசா­ர­ணைக்கு கூட உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஏனெனில் அவர்­க­ளது சாட்­சி­யத்தில் அஹ்னாப் ஜஸீ­முக்கு பாத­க­மான அல்­லது எதி­ரான எந்த விட­யங்­களும் அடங்­கி­யி­ருக்­க­வில்லை

இந்த நிலையில் சாட்சி நெறிப்­ப­டுத்­தலின் பின்னர் நீதி­மன்றில் விஷேட விண்­ணப்பம் ஒன்­றினை முன் வைத்த அரசின் சிரேஸ்ட சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­லக, இவ்­வ­ழக்கின் பிர­தான சாட்­சி­யா­ளர்கள் 5 பேரின் சாட்­சியம் நெறிப்­ப­டுத்­தப்பட்டு முடி­வு­றுத்­தப்பட்­டுள்­ள­தாக கூறினார்.   இது­வரை இவ்­வ­ழக்கின் 2,4,6,8,9 ஆம் இலக்க சாட்­சி­யா­ளர்கள்  சாட்­சி­ய­ம­ளித்­துள்ள நிலையில், அவர்­களின் சாட்­சி­யத்தின் உள்­ள­டக்­கத்தை கருத்தில் கொள்ளும் போது இவ்வழக்கை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா எனும் கேள்வி எழுவதாகவும், அதனால் அது தொடர்பில் சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை மன்றுக்கு அறிவிக்க இரு மாத கால அவகாசத்தை வழங்குமாறும் அரச சட்டவாதி உதார கருணாதிலக கோரினார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட, வழக்கை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டினை தெரிந்துகொள்வதற்காக விசாரணைக்கு அழைப்பதாக தெரிவித்து அத்திகதிவரை ஒத்தி வைத்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK