நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு பிணை


மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிந்தவூர் பிரதேச அரச பாடசாலையொன்றின் ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டது.

இதேவேளை இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபர் – நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவு வழங்கினார்.

கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி  பாடசாலையின்  விளையாட்டு அறையில் வைத்து, குறித்த ஆசிரியர் பாலியல் ரீதியாக மாணவனை  துஷ்பிரயோகம் செய்தார் என அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட  குறித்த மாணவன்   அதிபரிடம்   முறையிட்ட போதும் –  இரு வாரங்கள் கழிந்தும்  எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், சம்பவத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாணவனின் தாயார் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து தலைமறைவாகிய ஆசிரியர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK