ஹஜ் குழுவின் தலைவர் பதவியிலிருந்து அன்சார் ராஜினாமா.


அரச ஹஜ் குழுவின் தலைவர் பதவியிலிருந்து இப்றாஹீம் அன்சார் ராஜினாமா செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் நேற்று (29) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற  கூட்டமொன்றிலேயே குறித்த ராஜினாமத் தொடர்பான அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார். 

ஹஜ் பேசா பங்கீட்டில் அரசியல் தலையீடு தொடர்வது தொடர்பில் கடந்த வாரம்  ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்திருந்தன. 

அது மாத்திரமல்லாமல்,  இந்த பேசா விசாவில் அமைச்சர் நசீர் அஹமத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் ஆகியோரும்  அவர்களது குடும்பத்தினரும் ஹஜ் சென்றிருந்த விடயம் தெரியவந்தது. இச்செய்தி வைரலாக மக்கள் மத்தியில் பரவியமையினால் குறிப்பிட்ட இரண்டு அரசியல்வாதிகளுக்கு பாரிய நெடுக்கடியினை வழங்கியது. 

இதனை மறுத்து அமைச்சர் நசீர் அஹமத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் ஆகியோர் விசேட ஊடக அறிக்கைகளையும் தனித் தனியே வெளியிட்டிருந்தனர். 

இந்த நிலையில், மேற்படி அரசியல்வாதிகள் இருவரும் பேசா விசாவிலேயே சென்றதாக இப்றாஹீம் அன்சார் நேற்று இணைய ஊடகம் ஒன்றுக்கு  வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்திருந்தார். 

குறித்த விடயம் புத்தசாசன, சமய விவகார மற்றம் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிற்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளதாகவும். இவ்வாறான நிலையிலேயே, அரச ஹஜ் குழுவின் தலைவர் பதவியிலிருந்து இப்றாஹீம் அன்சார் ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK