புதிய பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்வாங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் உறுதியளிப்பு


புதிய பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக உள்வாங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.இதற்கமைய, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பிரிவுகளுக்கும் ஆங்கிலம் மற்றும் ஏனைய வெளிநாட்டு மொழிகளுக்கும் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படும் எனவும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.இருப்பினும், கடந்த மாதம் மொத்தம் 7,342 புதிய ஆசிரியர் நியமனங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK