பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள அஸ்வெசும சமூக நலன்புரி உதவித் திட்ட பயனாளிகள் தெரிவில் காணப்படும் குறைபாடுகள் முறையாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்த அம்பாறை மாவட்ட உண்மைக்கும் நீதிக்குமான வலையமைப்பு வலியுறுத்தியுள்ளது.
காரைதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தில் இணைப்பாளர் எம். ஐ. றியால் தலைமையில் நடைபெற்ற சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்த அம்பாறை மாவட்ட உண்மைக்கும் நீதிக்குமான வலையமைப்பின் சந்திப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும்,
இவ் நலன்புரி உதவி திட்டமானது பாகுபாடில்லாது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புகள் இணைந்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK