காத்தான்குடி கோட்ட கல்வி பிரச்சினையை தீர்த்த செந்தில் தொண்டமான், ஹிஸ்புல்லா!

 


நூருல் ஹுதா உமர்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை முன்னாள் அமைச்சரும், ஆளுநருமான கலாநிதி எம். எல். எம். ஏ. ஹிஸ்புல்லா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு விடயங்கள்  கலந்துரையாடப்பட்டது.

காத்தான்குடி கோட்ட கல்வி அலுவலகர் பதவி வெற்றிடம் ஏற்பட்டிருந்த நிலையில், அந்த பதவிக்கு இலங்கை கல்வி சேவை தரம் 3 தகுதியுடையவர்கள் இல்லாமையால், தற்காலிக அதிகாரியாக இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 தகுதியை கொண்ட எம். எம்.கலாவுதீன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை கல்வி சேவை தரம் 3 படிப்பை நிறைவு செய்திருந்த ஏ. ஜீ. மொஹமட் ஹக்கீமுக்கு கோட்ட கல்வி அலுவலகர் நியமனம் வழங்கப்பட்டு, தற்காலிக அதிகாரியாக நியமிக்கப்பட்ட எம். எம். கலாவுதீனுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் எம். எம்.கலாவுதீனுக்கு 58 கிலோ  மீட்டர் தூரத்தில் உள்ள பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதால் இவரின் வயதை அடிப்படையாக கொண்டும், மனிதாபிமான ரீதியிலும் அருகில் உள்ள ஒரு பாடசாலையில் நியமனம் வழங்க வேண்டுமென முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, ஆளுநர் செந்திலிடம்  கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கையை ஏற்று, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.ஜீ. திஸாநாயக்கவிடம் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து, கலாவுதினை அருகில் உள்ள பாடசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பணிப்புரை விடுத்ததுடன், கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இடமாற்றத்திற்கான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் உறுதியளித்தார்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK