லிட்ரோ விலை குறைப்பு - புதிய விலை விபரங்கள்


லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்
.

வீசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபாய் ஆகும்.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1281 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விலைத் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK