பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது


கேரள கஞ்சா ஒரு கிலோவும் பத்து கிராமை தம் வசம் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் அதிகாரியொருவரை இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் நேற்று (3) உத்தரவிட்டுள்ளார்.

முள்ளிப்பொத்தானை- 10ஆம் கொலனியில் வசித்து வரும் நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலையில் அனுராதபுர சந்தியில் இருந்து முச்சக்கர வண்டியில் கேரளா கஞ்சா பொதியை ஏற்றிக்கொண்டு சென்ற போதே 96ஆம் கட்டை பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு அருகில் வைத்துக் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்போபுர பொலிஸ் அதிரடிப் படையினருக்குக் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

சந்தேக நபரை தம்பலகாமம் பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் (வாசஸ்தல்) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK