தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் மேலும் 146 மாணவர்கள் சித்தி


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை பெறுபேறுகளின் அடிப்படையில் பரீட்சையில் சித்தியடையாத 146 மாணவர்கள் வெட்டுப்புள்ளியில் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை மீள பரிசீலிக்கும் போது 867 மாணவர்களின் மதிப்பெண் மட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்கு 20,334 சிங்கள ஊடக மாணவர்களும், 4,823 தமிழ் ஊடக மாணவர்களுமாக மொத்தம் 25,157 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனை இரண்டு பரீட்சார்த்திகளால் பரிசோதிக்கப்பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK