உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று சனிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்தோடு கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று வெள்ளிக்கிழமையுடன் (20) நிறைவடைந்தன.  கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதற்கமைய இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுராதபுர மாவட்டத்தில் தனித்து 3 சபைகளில் தனித்து போட்டியிட   வேட்புமனு தாக்கல்  செய்தது.  ஆட்சேபனை தெரிவிப்பதற்கான காலம் நிறைவடைந்ததன் பின்னர்  தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் 

அதற்கமைய இன்றைய தினம் தேர்தலுக்கான தினம் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.