மைதானத்திற்கு தமிழர் பெயரா? வெடித்த எதிர்ப்பு!


கோறளைப்பற்று பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் தவிசாளர் கனகரெத்தினம் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை இடுவதற்கு தவிசாளர் சோபா ஜெயரஞ்சித்தினால் இன்று ஞாயிற்றுக் கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சகோதார இனத்தவர்கள் விடுத்த கடும் எதிர்ப்பினை தொடர்ந்து குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டு பிரிதொரு தினத்தில் இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இவ் மைதானத்திற்கு தனி நபர்களது பெயர் எதுவும் வைக்காமல் முன்பு இருந்தமை போல் பொது விளையாட்டு மைதானம் என பெயர் வைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.​


குறித்த விடயம் தொடர்பாக கேள்வியுற்றவர்கள் மைதானத்திற்கு முன்பாக ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்துடன் தவிசாளருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.​


பின்னர் சம்பவ இடத்திற்கு வாழைச்சேனை பொலிசார் வரவழைக்கப்பட்டு கலவரம் ஏற்படாமல் தடுத்தனர்.​


பொலிசார் இரு தரப்பினரின் விடயத்தினை விசாரித்ததன் பின்னர் குறித்த செயற்பாட்டினை நிறுத்தியதுடன் நீதி மன்ற நடவடிக்கையின் பின்னர் பெயர் பலகை இடும் செயற்பாட்டினை மேற்கொள்ளுமாறு தவிசாளரிடம் ஆலோசனை வழங்கினர்.​


குறித்த விளையாட்டு மைதானம் புதுக்குடியிருப்பு கிராமசேகர் பிரிவிற்குள் வருவதாகவும் பிரதேச சபையில் முன்னாள் தவிசாளரின் பெயர் மைதானத்திற்கு வைக்கப்படவேண்டும் என சபை தீர்மானம் எடுக்கப்பட்டதனால் இன்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.​


இருந்தபோதிலும் சட்ட நடவடிக்கையின் பின்னர் மீண்டும் அதே இடத்தில் குறித்த தவிசாளரின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கருத்து தெரிவித்தார்.


-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK