ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு எலான் மஸ்க் வாடகை செலுத்த தவறியதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரின் தலைவராக எலான் மஸ்க் ஒரு பதவியேற்ற உடனேயே அதிரடியான பல விதமான மாற்றங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார் என்று பல தரப்பில் கூறப்பட்டு
வருகிறது. ட்விட்டர் சிஇஓ-வாக இருந்த பராக் அகர்வால் உள்பட பல ஆயிரம் ஊழியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்தார். அதுமட்டுமில்லாமல் புளூ டிக் வேண்டுமென்றால் அதற்கு கட்டாயமாக சந்தா செலுத்த வேண்டும் என்பதையும் அறிவித்தார். அது சர்ச்சையை உண்டாக்க, தற்காலிகமாக திரும்பப் பெற்றார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் கொலம்பியா ரெய்ட் என்னும் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் ட்விட்டர் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. அலுவலகத்திற்கான வாடகை முறையாக செலுத்தப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ட்விட்டருக்கு கொலம்பியா ரெய்ட் நிறுவனம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதில் வாடகைத் தொகையான 1,36,250 அமெரிக்க டாலரை 5 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் இது ரூ.1.12 கோடி ஆகும். இருப்பினும் வாடகையை ட்விட்டர் நிறுவனம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் மாநில நீதிமன்றத்தில் ட்விட்டருக்கு எதிராக வழஜ்க்கு தொடர்ந்துள்ளது கொலம்பியா ரெய்ட்.
ட்விட்டர் சான்பிரான்சிஸ்கோ அலுவலகம் மட்டுமல்லாது உலகளவில் இயங்கும் பிற நிறுவனங்களுக்கும் வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அத்துடன், இரண்டு தனி விமானங்களுக்கான கட்டடத்தை செலுத்தவில்லை எனக் கூறி விமான நிறுவனமும் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வளவு நடந்தாலும் ட்விட்டர் இதுதொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை.
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK