போதைப் பொருள் பயன்பாட்டினால் பெண்கள், சிறுவர்கள் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஊடவியலாளர்களுக்கு செயலமர்வு !

 


(நூருல் ஹுதா உமர்)

டயக்கோனியா சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு மற்றும் குடும்பரீதியில் பெண்கள், சிறார்கள் மத்தியில் தாக்கம் குறித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளம் ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வின் இரண்டாவது செயலமர்வு கல்முனையில் ஞாயிறு (18) இடம்பெற்றது.


முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல்.ஹபீலா இணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வளவாளர்களாக சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.பி.அப்துல் சுக்கூர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பிரதேச செயலகங்களின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.எல்.எப்.சிபாயா, பி. ஜெனித்தா, பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான எஸ்.எம்.ஏ.நஜீப், எஸ்.நிஸாந்தினி மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அலுவலக கணக்காளர் ஆர்.அனுஸ்கா உட்பட இளம் ஊடகவியலாளர்கள்  பலர் கலந்து கொண்டனர்.


அத்துடன் கடந்த செயலமர்வில் ஊடகங்களுக்கு அறிக்கையிடுதல் தொடர்பாக விடுக்கப்பட்ட அறிவித்தலை செயற்படுத்திய மருதமுனை எம்.ஐ. ஹைறுன்னிஸா, மாளிகைக்காடு நூருல் ஹுதா உமர், சம்மாந்துறை  எம்.எம். இம்ரான், நற்பிட்டிமுனை பாத்திமா ஜெஸ்னி ஆகிய நான்கு பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.


நிகழ்வின் இறுதியில் பயிற்சி நெறியில் கலந்து கொண்ட இளம் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK