13 அகவை சிறுமி துஸ்பிரயோகம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 அகவை பாடசலை சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய உறவு முறையான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.


முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் தாய் இல்லாத நிலையில் தந்தை மற்றும் சகோதரனின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த சிறுமியின் மாமனின் மனைவி வெளிநாடு சென்றுள்ள நிலையில் மாமன் குறித்த சிறுமியுடன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்துள்ளார்.


இந்த நிலையில் கடந்த 10 ஆம் மாதம் 17 ஆம் திகதி வீட்டில் உறவினர்கள் இல்லாத நிலையில் வீட்டிற்குள் சென்ற மாமன் தனிமையில் இருந்த சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த அநீதியினை யாரிடம் சொல்வது என்று தெரியாத நிலையில் பாடசாலை ஆசிரியரிடம் தகவலை தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.


பொலிஸாரின் உதவியுடன் குறித்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பெண்கள் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு குறித்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளார்கள்.


கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.


குறித்த குடும்பஸ்தர் சிறுமியின் அக்கா முறையான 20 அகவையுடை யுவதியுடனும் பாலியல் துஸ்பிரயேகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK