நாட்டில் 100 இற்கும் மேற்பட்ட மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


கொடுப்பனவுகள் தாமதமாக வழங்கப்படுகின்றமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எவ்வாறாயினும், முடிந்தவரை தேவைக்கு ஏற்ப மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.