அரிசியின் விலையும் அதிகரிப்பு?



எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு கிலோகிராம் அரிசிக்கு நூற்றுக்கு இரண்டரை வீதம் சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளமையினால் அரிசியின் விலையானது மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதின் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரிசிக்கு விலையினை அதிகரிக்காது விற்பனை செய்யப்பட வேண்டுமாயின் நெல்லினை குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மக்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் காணப்படுகையில் அரசாங்கம் சர்வதேசத்திலிருந்து அரிசியை இறக்குமதி செய்கின்றது.

அத்துடன் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியினை அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் மோசடியும் அதனை எதிர்த்து கேள்வி எழுப்புவதற்கு விவசாய திணைக்கள அதிகாரிகளிடம் காணப்படும் இயலாமையுமே அரிசியின் விலை அதிகரிப்பிற்கு காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதனால் 700 இற்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதின் பெரேரா மேலும் குறிப்பிட்டார்.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK