டொம் மூடி இலங்கை கிரிக்கெட் சபையில் வகித்து வந்த ‘கிரிக்கெட் பணிப்பாளர்’ பதவியை முடிவுறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.


இது தொடர்பில் டொம் மூடிக்கும் இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று குழுவுக்கும் இடையே பரஸ்பர இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் பணிப்பாளர் டொம் மூடி, இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவுடன் நேரடியாக பணியாற்றி வந்தார். அந்த குழு தற்போது இல்லை என்பதால் குறித்த பதவியும் அவசியமற்றது என கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.