கொரியாவுக்கு தொழில் நிமித்தம் அடுத்த மாதம் மேலும் 750 பேரை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


கொரியன் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களை அந்நாட்டிற்கு தொழிலுக்காக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் சேனாரத்ன யாப்பா தெரிவித்துள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,100 பேர் தொழில் நிமித்தம் கொரியாவிற்கு சென்றுள்ளனர். தொழிற்சாலைகள், கட்டிட நிர்மாணப் பணிகள், கடற்றொழில் துறை உள்ளிட்ட துறைகளுக்காக இலங்கை பணியாளர்கள் அனுப்பப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தொழில் நிமித்தம் இஸ்ரேலுக்கு செல்வதற்கு 500 பேர் தகுதி பெற்றுள்ளனர்.