வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்காக பணம் பெறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 


சர்வதேச சமூகத்தின் உதவியுடன் குறித்த நபர்களுக்கு அந்தஸ்து பாராது தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.