இன்று குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறப்பு


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகங்கள் இன்றைய தினம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமது பிரதான மற்றும் பிராந்திய அலுவலகங்கள் இன்றைய தினம் திறந்திருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளியுறவு அமைச்சின் தூதரக அலுவலகங்கள் இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று காலை 7.30 முதல் 4.30 வரை கொன்சியூலர் அலுவலகங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளே இன்று வழங்கப்படும் என வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், வெளியுறவு அமைச்சின் தூதரக அலுவலகங்கள் நாளைய தினம் மூடப்பட்டிருக்குமென்பதுடன், நாளை மறுதினம் முதல் வழமை போன்று செயற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK