பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் : வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு


ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

நீதிபதிகள் சஞ்சீவ மொராயஸ், மஹேன் வீரமன் மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது ஜனவரி 24 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் 17 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்