முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகள் பலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் அவர் கற்பித்த பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இவ்வாறு பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.


மாணவிகளின் தனிப்பட்ட படங்களை வைத்து, தொலைபேசி வாயிலாக அச்சுறுத்தி இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேகநபரான ஆசிரியரது தொலைபேசியை பரிசோதனைக்கு உட்படுத்திய போது இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆசிரியர் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்னிலையானதோடு கைது செய்யப்பட்டுள்ளார்.


5 மாணவர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.


அவர்களில் ஒருவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரையிலும் மற்றுமொரு சந்தேகநபரை 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


ஏனைய 4 மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவத்துடன் தொடர்புடைய சில மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


இந்த குற்றச் செயலுடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக முல்லைத்தீவு காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.