காமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுன் நபி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது,சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவரை பேசவிடாது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
அவரை பேசுவதற்கு அனுமதிக்குமாறு சபாநாயகரும் ஆளும் தரப்பு எம். பிகளும் கேட்டுக் கொண்ட போதும் அவர் முறையாக பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் முஷாரப் எம்.பி சற்றுமுன் உரையாற்றும் போது அவர் முன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளை நீட்டியபடி நின்றார் சாணக்கியன் எம்.பி . ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பின்னர், நாட்டின் நிலைமை குறித்தும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும் முஷாரப் எம்.பி பேசினார்.
அதன்போது அவர் முன் சென்ற சாணக்கியன் எம்.பி ,ஐயாயிரம் ரூபா தாளை நீட்டியபடி அதனை பெற்றுக்கொண்டு பேசுமாறு சைகை செய்தார். இதன்போது சபையில் களேபரம் ஏற்பட்டது.ஆளுங்கட்சி எம்.பிக்கள் இதன்போது சாணக்கியனுக்கு எதிர்ப்பினை வெளியிட்டனர் யாரோ கூச்சல் விட்டாலும் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.நாடும் மக்களும் தான் எனக்கு முக்கியமே தவிர தனிப்பட்ட எவரும் முக்கியமல்ல. எந்த நிலையிலும் சபையில் தான் தனித்து செயல்படப் போவதாக அவர் உரையாற்றும்போது கூறினார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK