கொரோனா மரண அடக்கத்துக்கு மாற்று இடங்களும் அடையாளப்படுத்தப் பட வேண்டும்


கொரோனாவினால் மரணமடைவோர் தற்போது ஓட்டமாவடியில் மட்டுமே நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தவிர அடக்கத்துக்கு மாற்று இடங்களும் அடையாளப்படுத்தப் பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சகல பாகங்களிலும் கொரோனாவினால் மரணமடைவோரின் உடல்கள் இன, மத பேதமின்றி ஓட்டமாவடியில் மட்டுமே நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் மிகக் குறுகிய காலத்தில் 200 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 

வைத்தியர்களின் அறிக்கைப்படி அடுத்து வரும் வாரங்களில் மரணமடைவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். இப்படி அதிகரிக்கும் போது ஓட்டமாவடியில் அடக்கத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணி போதாமல் போகலாம். 

எனவே, இப்போதே கொரோனா மரண அடக்கத்துக்கு மாற்று இடங்களை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால் இது குறித்து அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே இறக்காமம், புத்தளம், மன்னார், கிண்ணியா போன்ற பிரதேசங்களில் மாற்று இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பொருத்தமானவற்றை உறுதிப்படுத்தி அவ்வப்பிரதேசத்தோடு அண்டிய பகுதி உடல்கள் அவ்வப்பகுதிகளில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யலாம்.

இறந்த உடல்கள் இராணுவப் பாதுகாப்போடு தான் ஓட்டமாவடிக்ககு எடுத்தச் செல்லப்படுகின்றன. இதற்காக அரசுக்கு செலவீனங்கள் உள்ளன. இவ்வாறு மாற்று இடங்களை உறுதிப் படுத்துவதன் மூலம் தூரங்களைக் குறைத்து அரச செலவினங்களையும் குறைக்க முடியும்.

எனவே, அரசு இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு கொரோனா மரண அடக்கத்துக்கு மாற்று இடங்களையும் அடையாளப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுப்பது மிகவும் உசிதமானது என இம்ரான் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK