முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை குறை கூறாதீர்கள் - பணிப்பாளர் அஷ்ரப் வேண்டுகோள்


பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆ தொழுகை, தராவீஹ் தொழுகை மற்றும் ரமழான் மாத அமல்கள் நிறுத்­தப்­பட்­ட­மைக்கு முஸ்லிம் சமய பண்பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தை குறை கூறா­தீர்கள். விமர்சிக்­கா­தீர்கள், சுகா­தார அமைச்சின் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அசேல குண­வர்­த­னவின் சுற்று நிரு­பத்­தையே திணைக்­களம் அமு­லுக்கு கொண்­டு­வந்­துள்­ளது. நாட்­டி­னதும் சமூ­கத்­தி­னதும் பாதுகாப்பு கருதி கொவிட் வைரஸ் தொற்­றி­லி­ருந்து தவிர்ந்து கொள்வ­தற்கு நாம் ஒத்­து­ழைக்க வேண்டும்.

ஆகக்கூடிய தொகை­யாக 25 பேரே பள்­ளி­வாசல் ஐவேளை தொழுகை­களில் கலந்துகொள்ள முடியும் என்­பது பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ர­மல்ல ஏனைய மதத்­த­வர்­க­ளுக்கும் இந்த எண்ணிக்கையானோரே மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். எனவே கட்டுப்­பா­டுகள் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு மாத்­திரம் அல்ல என்­பதில் நாம் தெளிவு பெற­ வேண்டும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரி­வித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்­சியில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் தனி­மைப்­ப­டுத்தும் சட்­டத்தின் கீழ் கொவிட்19 வைரஸ் தொற்று தொடர்­பான சுற்றுநிருபங்கள் வெளி­யி­டு­வ­தற்கு சுகா­தார அமைச்­சுக்கே அதிகார­முள்­ளது. எனக்கு அது தொடர்பில் சுற்று நிருபம் வெளி­யிட முடி­யாது. அவ்­வா­றான சுற்று நிரு­பங்­களை அமுல்­ப­டுத்­து­வதே எனது கடமை.

சுகா­தார அமைச்சின் பணிப்­பாளர் நாயகம் பள்ளிவாசல்களுக்கென்று பிரத்­தி­யே­க­மாக சுற்று நிரு­பங்கள் வெளியி­டு­வ­தில்லை. சுகா­தார அமைச்சின் சுற்று நிரு­பங்கள் அனைத்து மதத்­த­லங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தா­கும்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் பள்ளிவாசல்களில் ரமழான் கஞ்­சியை நிறுத்­தி­விட்­ட­தாக சிலர்­ குறை கூறு­கி­றார்கள். விமர்­சிக்­கி­றார்கள். சுகா­தார அமைச்சின் பணிப்பாளர் நாய­கத்தின் சுற்று நிருபம் கஞ்சி கொடுக்க வேண்டாம் எனக்­கூ­ற­வில்லை. பள்­ளி­வா­ச­லுக்குள்ளே கஞ்சி விநி­யோ­கிப்­ப­தற்கே தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வாசல் வளா­கத்தில் விநியோகிக்கலாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சுற்று நிரு­பத்தை தவ­றாக விளங்­கிக்­ கொண்­டுள்ள சுகா­தார அதிகாரிகள் சிலரே பள்­ளி­வாசல் வளா­கத்தில் விநி­யோ­கிக்­கப்­படும் கஞ்சிக்கு தடை­ வி­திக்­கி­றார்கள்.

பள்ளி வாசல்­களை நாம் மூடச் சொல்­ல­வில்லை. பள்­ளி­வா­சல்­களில் கூட்­ட­மாக கூடா­தீர்கள். சுகா­தார வழி­காட்­டல்­களை தவ­றாது பின்பற்­றுங்கள் என்றே கூறு­கிறோம்.

எமது சமூகத்தில் ஒருசிலரே அரசாங்கத்தையும், திணைக்களத்தையும் இவ்விவகாரத்தில் விமர்சிக்கிறார்கள், பெரும்பாலானோர் ஒத்துழைக்கிறார்கள். விமர்சிப்பவர்கள் உணர்ச்சி மேலீட்டினாலே இவ்வாறு செயற்படுகிறார்கள். அவர்கள் மீது நாம் கோபப்படவில்லை என்றார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK