பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய எவ்வித சட்ட ரீதியான தடைகளும் இல்லை என சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..