மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணை எதிர்வரும் 04.06.2021 வரை ஒத்திவைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் (FR) வழக்கு, இன்று 28.05.2021 வெள்ளிக்கிழமை, உச்ச நீதிமன்றத்தில் முதற்தடவையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது, உயர் நீதிமன்ற  நீதியரசர்களில் ஒருவரான கடந்த ஈஸ்டர் தா
க்குதல் ஜானாதிபதி  விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக  இருந்த கொளரவ நீதியரசர் ஜனக்த சில்வா, தான் இந்த வழக்கில் இருந்து தவிர்த்து கொள்வதாகவும், புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும்  அறிவிக்கப்பட்டது .

எனவே, இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் 04.06.2021 வரை ஒத்திவைக்கப்பட்டது. 

இவ் வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம்.சஹீட், ருஷ்தி ஹபீப் மற்றும் மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் சட்டத்தரணியுமான அமீர் அலியும் ஆஜராகினர்.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசாவின் வழிகாட்டலில் இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK