றிசாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு CIDக்கு அறிவுறுத்தல்


தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டுவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன், கோரிக்கைவிடுத்தால் அவரை பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் ஆலோசனைக்கு அமைய இது அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 04ஆம், 05ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் – 19 தொற்றுநோய் சூழல் காரணமாக சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்துவருமாறும் நரேந்திர பெர்னாந்து அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK