(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை விடுத்துள்ளார். 

அப்பதிவில், 

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்: ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.

கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் பற்றி தெரிவித்துள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் படி, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டால் அதன் பாவத்தை கார்டினலே ஏற்கவேண்டும் என்றும் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.