கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தொழில் புரியும் 42 ஊழியர்களுக்கு கோவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளமையை அடுத்து பொருளாதார மத்திய நிலையத்தை 72 மணி நேரத்திற்கு மூட தீர்மானித்துள்ளதாக வர்த்தக சங்க தலைவர் யு.பி. ஏக்கநாயக்க கூறியுள்ளார்.

பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்படும் எனவும் ,பொருளாதார மத்திய நிலையத்திற்கு வரும் அனைவருக்கும் பி.சீ. ஆர் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.