இம்மாத இறுதியளவில் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் கல்வியமைச்சர். இப்பின்னணியில் பல்கலைக்கழக அனுமதியில் தாமதம் இருக்காது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகள் ஜுன் இறுதியளவில் வெளியிடப்படவுள்ளதாகவும் ஜுலை மாதம் உயர்தர வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.