6 கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்


கட்சிகளுக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இப்படியான 6 கட்சிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த கட்சிகளின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு சிலர் உரிமை கோரியுள்ளதால், சட்ட ரீதியான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், இதனை தீர்க்க அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

வழக்குகள் முடிவடையும் வரை இந்த கட்சிகளின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் காரணமாக குறித்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், கட்சிகளின் பெயர்களை வெளியிட முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK