(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்' எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிந்தவூர், ஜாமிஉத்  தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் சமூக சேவைப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள இந்த இரத்ததான முகாமில் அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முன்வருமாறு ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கும் முன் பதிவுகளுக்கும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுள்ளனர்.