தோல்வி அடையாத் தலைவர்கள்



கீழே உள்ள இருவரும் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் சிங்கம் றிஷாத்தும் தோற்ற வரலாறே இல்லை. தோல்வி இவர்களது அகராதியில் இல்லை. இவர்கள் வெற்றி நாயகர்களே! இது சிந்திப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.

எப்போதும் தலைவர்களே! எப்படியும் வருவார்கள். தோற்றால் எதிர்க்கட்சித் தலைவர்கள். ஆளும்கட்சியின் பங்காளிகள். வென்றால் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர். மக்கள் காங்கிரஸின் தலைவர். அந்தஸ்து உள்ள அதிக பணம் உழைக்க கூடிய முழு அமைச்சுகளின் சொந்தக்காரர்கள்.

தோல்வி என்றால் என்ன? என்று இவர்களுக்குத் தெரியவே தெரியாது. தோல்வியடைந்து சொகுசு வசதிகள் இன்றி வாழ்ந்த சரித்திரமே இல்லை. தலைவரின் பரம்பரை சொத்து முஸ்லிம் காங்கிரஸ். இதில் மாற்றம் கிடையாது. ஆயுட்க்காலத் தலைவர் ஹக்கீம் சேர்.

காரணம் கேட்டால் கட்சியில் இருந்து துரத்தப்பட்டு விடுவார். ஏன் வீண் வம்பு என்று கட்சியின் போராளிகளாக பலர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிலையாகி விட்டனர். உயர்மட்ட அங்கத்தவர்கள் அந்தக் கட்சியின் போராளிகள். போராளிகள் என்ற வார்த்தைக்கு சுகம்.

உயர்பீட உறுப்பினர்கள் என்ற பெருமையில் மரணம் வரை ஒட்டிக் கொண்டிருப்போர் சிலர். இவர்களின் முன்மாதிரி கண்டு இந்த உலகம் இஸ்லாத்தைப் புரிந்து கொண்டது. இவர்களது நடைமுறை வாழ் நற்பண்புகள் பலரை இஸ்லாத்துக்குள் நுழையச் செய்துவிட்டது.

பாராளுமன்றத்தில் காட்டிய முன்மாதிரி பல அரசியல்வாதிகளை சிந்திக்க வைத்து சீராக்கி விட்டது. கப்ர் அறையைச் சந்திக்கும் வரை இவர்கள்தான் தலைவர்கள். மாற்றமே கிடையாது.

இவர் மரணித்தால் அவர். டென்ஷன் இல்லாத பென்ஷன் உள்ள நல்ல தொழில்.

Retirement இல்லாத அற்புதமான தொழில் அரசியல். ஒரு முறை வந்து விட்டால் மாறி மாறி வரலாம். அல்லது தொடர்ந்தும் வரலாம்.இம் முறை தோற்றாலும் அடுத்த முறை வரலாம். 

இத்தகைய அழகிய தொழில் வேறு என்னதான் இருக்கிறது? முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்களை வைத்து நாங்கள் பழிவாங்கப் பட்டுக் கொண்டிருக்கிறோமா?

இல்லை இல்லை இந்த மாபெரும் தலைவர்களால் எமக்கு அந்தஸ்து கௌரவம் எல்லாம் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றதா? பாராளுமன்றத்தில் எழுந்து நின்றால் அமைதி கோலோச்சி விடும். இவர்களைக் கண்டு பாராளுமன்றம் நடுங்கும்.

முஸ்லிம் சமுதாயம் தலைநிமிர்ந்து ஒப்பற்ற சமுதாயம் என்று எல்லோராலும் போற்றப் படுகின்ற நடுநிலையான முன்மாதிரியான சமூகம் என்று புகழாரம் சூட்டப்படும் உன்னத நிலைக்கு இந்த அரசியல்வாதிகள் காரணமாக இருந்தார்களா? சிலர் கூறுகின்றனர் இரண்டு நரம்புகள் இவர்களுக்கு வெட்டப்பட்டுள்ளன.

(1) கோப நரம்பு

(2) ரோச நரம்பு

தூற்றுவோர் தூற்றட்டும் பழுதியாயால் எங்களை மூழ்கவைப்போர் மூழ்க வைக்கட்டும் என்று கூறி பயணம் தொடர்கிறது. பார்வையாளராக இருக்க வேண்டாம் பங்காளியாக ஆகுங்கள் என்ற கோஷத்தோடு நார்வே தக்பீர் முழக்கத்தோடு வெற்றிபெறச் செய்வோம்.

இன்ஷா அல்லாஹ் இனி ஆதவன் விரைந்து வருவான் மாகாணசபைத் தேர்தல் முடியும் வரை எம்மைச் சுற்றி சுற்றி திரிவான். இகம் எங்கும் ஒளிபரப்பி. லட்சோப லட்சம் விளக்குடன் ஒளி கொடுக்கும்.

எங்கள் வாழ்வில் இனி இருளே இல்லை. மறுமை வரை இதுதான் நமது வரலாறு. அரசியலில் மாற்றங்கள் இல்லை. மாற்ற நினைப்பவர்கள் தோற்றுப் போவர். அல்லது மடையர்கள் என்று தூற்றப்படுவர்.

நாங்கள் காலில் விழுந்து எங்களுக்கு அரசியல் விடிவு தாருங்கள் என்று மன்றாடி பெற்ற தலைவர்களின் பயணம் மறுமை வரை.

வாழுங்கள் வளமுடன். நாங்கள் எக்கேடு கெட்டாலும் நாடு எக்கேடு கெட்டாலும் நீங்கள் வாழுங்கள் நலமாக என்று பிரார்த்திக்கின்றோம்.

நாங்கள் உங்கள் வரங்களால் அருள் பெற்று வாழ்வோம்.

அப்துல் அஸீஸ்

கிண்ணியா




BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK